எந்தவொரு பிரச்சனைக்கும், தற்கொலை ஒரு தீர்வு அல்ல. இருப்பினும், அந்த விபரீத முடிவை, சிலர் எடுத்து விடுகின்றனர். குறிப்பாக, சினிமாதுறையை சேர்ந்த கலைஞர்கள், கடந்த சில ஆண்டுகளில், தொடர்ச்சியாக தற்கொலை செய்து வருகின்றனர்.
அந்த வகையில், கர்நாடகாவை சேர்ந்த பிரபல நடிகை சோபிதா ஷிவன்னா, தனது வீட்டில் தற்கொலை செய்துக் கொண்டுள்ளார். இதனை அறிந்த ரசிகர்கள் பலரும், தங்களது இரங்கல்களை கூறி வருகின்றனர்.
நடிகை சோபிதா ஷிவன்னா, 10-க்கும் மேற்பட்ட சீரியல்களிலும், பல்வேறு திரைப்படங்களிலும், முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.