அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா, ஃபகத் ஃபாசில் உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ள திரைப்படம் புஷ்பா 2. சுகுமார் இயக்கியுள்ள இந்த திரைப்படம், வரும் டிசம்பர் 5-ஆம் தேதி அன்று ரிலீஸ் ஆக உள்ளது.
இந்நிலையில், இந்த திரைப்படத்தின் டிக்கெட், எவ்வளவு ரூபாய்க்கு விற்பனை ஆகிறது என்ற தகவல், தற்போது கிடைத்துள்ளது. அதன்படி, மும்பை நகரில் உள்ள பிரபல திரையரங்கில், 3 ஆயிரம் ரூபாய்-க்கு, ஒரு டிக்கெட் விற்பனை செய்யப்படுகிறது.
இதுதொடர்பான ஸ்கீரின் ஷாட்களும், இணையத்தில் வெளியாகி, நெட்டிசன்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.