உத்தரபிரதேச மாநிலம் சாரங்பூர் கிராமத்தை சேர்ந்தவர் நீது. 22 வயதான இவர், தனது செல்போனுக்கு, நேற்று சார்ஜ் போட்டுள்ளார். பின்னர், சில நிமிடங்களுக்கு பிறகு, சார்ஜரில் இருந்து செல்போனை எடுத்துள்ளார். அப்போது, மின்சாரம் தாக்கி அவர் அலறி துடித்தார்.
சத்தம் கேட்டு வந்த உறவினர்கள், அவரை மீட்டு, பான்ஸ்டிஹ் பகுதியில் உள்ள முதன்மை சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு, பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதனை அறிந்த உறவினர்கள், கடும் சோகத்தில் ஆழ்ந்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், விசாரணை நடத்தி வருகின்றனர்.