தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் பகுதியை சேர்ந்த ராஜ் என்பவருடை மகனான மனோஜ் என்பவர் சங்கரன்கோவில் பகுதியில் உள்ள ஜோசப் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து முடித்துள்ளார்.
தற்போது மனோஜிக்கு சேரன்மகாதேவி பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படிப்பதற்காக இலவசமாக சீட்டு கிடைத்துள்ளது.
இந்த நிலையில் தனது மகனின் மாற்று சான்றிதழை பள்ளி நிர்வாகத்திடம் கேட்டபோது, ரூ.54 ஆயிரம் பணம் கட்டினால் மட்டுமே மாற்று சான்றிதழ் தர முடியும் எனவும், இல்லையென்றால் பணத்தை பிச்சை எடுத்தாவது கட்டு என மாணவனின் தந்தையை பள்ளியின் தலைமை ஆசிரியர் பேசியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து மாணவனின் தந்தை மாவட்ட ஆட்சியர் கமல்கிஷோரிடம் தனது மகனின் படிப்பு கருதி தனது மகனின் மாற்றுச் சான்றிதழை பெற்று தரும்படி கோரிக்கை மனு கொடுத்தார்.
இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் பள்ளிக் கல்வித் துறை அதிகாரியிடம் இது தொடர்பாக உரிய விசாரணை எடுக்குமாறு கேட்டுக் கொண்டார்.