சென்னை தாம்பரம் அருகே, கட்டுமான பணியில் ஈடுபட்டு, விபத்தில் சிக்கிய வடமாநில இளைஞர், சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.
சென்னை தாம்பரம் அருகே உள்ள சேலையூர் பகுதியில், அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று கட்டப்பட்டு வந்தது. அதன் கட்டுமான பணியில், கனகராஜ், சுரூ ஆகிய 2 பேர் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில், 3-வது மாடியில் இருவரும் பணியாற்றியபோது, சாரம் சரிந்து விழுந்து, விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த அவர்கள், மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
இதில், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே கனகராஜ் உயிரிழந்த நிலையில், சிகிச்சை பெற்று வந்த சுரூ இன்று காலை உயிரிழந்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், விசாரணை நடத்தி வருகின்றனர்.