திருவள்ளூர் அருகே, ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை, கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் விடையூர் அருகே உள்ள கொசஸ்தலை ஆற்றில், பல மாதங்களாக பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இதனை விரைவில் முடிக்க வேண்டும் என்று, அப்பகுதி மக்கள் தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில், ஃபெஞ்சல் புயல் காரணமாக, கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், தங்களது அன்றாட பணிகளை செய்ய முடியாமல், அப்பகுதி மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
எனவே, மழைக் காலங்களில் ஆற்றை கடப்பதற்காக, மந்தமாக நடைபெற்று வரும் பாலம் கட்டும் பணியை, விரைவில் முடிக்க வேண்டும் என்று, தமிழக அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.