வெற்றிமாறன் இயக்கத்தில் உருவான விடுதலை படத்தின் மூலம், நடிகர் சூரி ஹீரோவாக உருவாகினார். இந்த படத்திற்கு பிறகு, கருடன், கொட்டுக்காளி உள்ளிட்ட படங்களில் நடித்து முடித்துள்ளார்.
மேலும், இவர் நடித்துள்ள விடுதலை 2-ஆம் பாகமும், விரைவில் ரிலீஸ் ஆக உள்ளது. இந்நிலையில், நடிகர் சூரி மீண்டும் வெற்றிமாறனுடன் கூட்டணி அமைக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது, செல்பி என்ற படத்தை இயக்கிய மதிமாறன், தற்போது புதிய படம் ஒன்றை இயக்க உள்ளார். வெற்றிமாறன் கதை எழுதியுள்ள இந்த படத்தில், நடிகர் சூரி தான் ஹீரோவாக நடிக்க உள்ளார். வெற்றிமாறனுடன் சூரி தொடர்ச்சியாக கூட்டணி அமைப்பது, அவரது மார்கெட்டை உயர்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.