அமரன் படத்தின் மொத்த வசூல்? மாஸ் காட்டும் SK!

சிவகார்த்திகேயன், சாய் பல்லவி ஆகியோர் நடிப்பில், ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவான திரைப்படம் அமரன்.

மறைந்த முன்னாள் ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இந்த திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், இப்படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் குறித்து, தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இதுவரை உலகம் முழுவதும், 399 கோடி ரூபாயை, இப்படம் வசூலித்துள்ளதாம்.

இதனை வைத்து பார்க்கும்போது, 2024-ஆம் ஆண்டில் ரிலீஸ் ஆன படங்களிலேயே, அதிகம் வசூலித்த 2-வது படமாக அமரன் உள்ளது என்று தெரியவந்துள்ளது.

RELATED ARTICLES

Recent News