அம்பேத்கர் எல்லோருக்குமான தலைவர் என்ற பெயரில் எழுதப்பட்டுள்ள புத்தகத்தின் வெளியீட்டு விழா, கடந்த 6-ஆம் தேதி நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்துக் கொண்ட த.வெ.க தலைவர் விஜய், அம்பேத்கர் குறித்தும், ஆளுங்கட்சியை விமர்சித்தும், பல்வேறு கருத்துக்களை பேசியிருந்தார்.
மேலும், விசிக துணை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனாவின் பேச்சு, விஜய்-க்கு ஆதரவாக இருந்ததாகவும் கூறப்பட்டது. இவ்வாறு இருக்க, இந்த நிகழ்வு குறித்து, தனது வாட்ஸ் அப் பக்கத்தில், இயக்குநர் அமீர் ஸ்டேடஸ் ஒன்றை பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில், செல்வந்தர்களின் திடீர் அரசியல் பிரவேசம் மக்களுக்கு என்றைக்குமே நன்மை தராது என்றும், ஆதவ் அர்ஜுனாவின் நட்பு விஜயின் அரசியலுக்கு நல்லதல்ல என்றும் தெரிவித்துள்ளார். இவரது இந்த வாட்ஸ்-அப் ஸ்டேடஸ், இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.