மீன் குழம்பும் மண் பானையும் படத்தின் மூலம், தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் காளிதாஸ் ஜெயராம். இந்த படத்திற்கு பிறகு, புத்தம் புது காலை, பாவ கதைகள், ஒரு பக்க கதை, விக்ரம், நட்சத்திரம் நகர்கிறது, போர், இந்தியன் 2, ராயன் போன்ற படங்களில் நடித்திருக்கிறார்.
பெரும்பாலும் மலையாள படங்களில் நடித்து வரும் காளிதாஸ் ஜெயராம், தாரிணி என்ற பெண்ணை, நீண்ட நாட்களாக காதலித்து வந்தார். இந்நிலையில், இன்று இந்த காதல் ஜோடிக்கு திருமணம் நடந்துள்ளது. இதுதொடர்பான புகைப்படங்களும், வைரலாகி வருகிறது.