சென்னை மதுரவாயலில் தொழிலதிபரின் பங்களா வீட்டில் 19 வயது இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை மதுரவாயில் அஷ்டலட்சுமி நகரில் என்டிஆர் கம்பனி உரிமையாளர் வீடு உள்ளது. இந்த பங்களாவில் வடமாநில பெண்கள் உட்பட 15-க்கும் மேற்பட்ட பெண்கள் பங்களாவிலேயே தங்கி வீட்டு வேலை செய்து வருகின்றனர். அதேபோல் தோட்டக்காரர், ஓட்டுனர் என 30-க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர்.
இந்த நிலையில் அங்கு பணியில் இருந்த ஒரிசாவை சேர்ந்த ஜீரா மந்தாகி (19) என்ற இளம் பெண் பங்களாவில் உள்ள முதல் தளத்தில் சிட் அவுடில் உள்ள கைப்பிடியில் துப்பட்டாவில் தூக்கில் தொங்கியபடி இருந்துள்ளார்.
இது குறித்து தகவல் அறிந்து வந்த மதுரவாயல் காவல்துறையினர் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
வீட்டில் இருந்த சிசிடிவியை ஆய்வு செய்த போது இளம் பெண் அவரே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
மேலும், தற்கொலைக்காண காரணம் குறித்து மதுரவாயல் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். வேலை செய்த இடத்தில் ஏதேனும் பிரச்சனையா அல்லது அவரது சொந்த பிரச்சினையா என விசாரித்து வருகின்றனர்.