சிவகார்த்திகேயன் நடிப்பில், தனுஷ் தயாரிப்பில், எதிர்நீச்சல், காக்கி சட்டை ஆகிய இரண்டு திரைப்படங்கள் உருவானது. ஆனால், அதன்பிறகு, இவர்கள் இரண்டு பேரும் மீண்டும் இணைந்து பணியாற்றவே இல்லை.
இதன்காரணமாக, இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாக, நீண்ட நாட்களாக, கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், பிரபல பத்திரிகையாளர் அந்தனன் வீடியோ ஒன்றில் பேசியுள்ளார்.
அதில், தனுஷ்-க்கும், சிவகார்த்திகேயனுக்கும் மோதல் இருப்பது என்பது உண்மை தான் என்று தெரிவித்தார். மேலும், தனுஷின் தயாரிப்பில் உருவாக இருந்த திரைப்படத்தில் நடிப்பதற்கு, சிவகார்த்திகேயன் அதிக சம்பளம் கேட்டார். அதற்கு, தனுஷ் உடன்படாததால் தான், இருவரும் பிரிந்தனர் என்றும் கூறினார்.