கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவான படத்தில் கடைசியாக நடித்திருந்த சூர்யா, தற்போது ஆர்.ஜே.பாலாஜியின் இயக்கத்தில் நடித்து வருகிறார்.
சூர்யா 45 என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தை, ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தான் தயாரித்து வருகிறது. இப்படத்தில், ஏ.ஆர்.ரகுமான் தான் இசையமைக்க உள்ளார் என்றும், முதலில் கூறப்பட்டது.
ஆனால், தற்போது அவர் அந்த படத்தில் இருந்து வெளியேறியுள்ளார். மேலும், இவருக்கு பதிலாக, சாய் அபயங்கர் தான் இசையமைப்பாளராக பணியாற்ற இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.