சூட்கேஷை திறந்து பார்த்தால் அதிர்ச்சி… கட்டு கட்டாக காகித நோட்டுகள் கொடுத்து மோசடி!

கோவையை அடுத்த சின்னியம்பாளையத்தில் மகளிர் சுய உதவிக் குழு உள்ளது. அவர்களுக்கு சூலூர் அருகே செலக்கரிச்சலை சேர்ந்த விஜயா மற்றும் அன்பழகன் (50) ஆகியோர் அறிமுகமானார்கள்.

அன்பழகன் தான் அறக்கட்டளை நடத்தி வருவதாகவும் நீங்களும் ஊனமுற்றோர் பெயரில் அறக்கட்டளை தொடங்கினால் வெளிநாட்டில் இருந்து வட்டி இல்லாமல் கடன் கிடைக்கும் என்று கூறி உள்ளனர்.

இதனையடுத்து விஜயா மற்றும் அன்பழகன் ஆகியோர் மகளிர் சுய உதவிக் குழுவைச் சேர்ந்த 28 பெண்களை சந்தித்து உங்களுக்கு வட்டி இல்லாமல் ரூபாய் 6 கோடியில் பங்கு பெற்று கொள்ளலாம் என்றும் கூறி உள்ளனர். அதை நம்பிய 28 பேரும் சேர்ந்து ரூபாய் 5 லட்சம் கொடுக்க முடிவு செய்தனர்.

இதில் இரண்டு பெண்கள் “ரூபாய் 5 லட்சத்தை தயார் செய்து விட்டு அன்பழகன் மற்றும் விஜயா ஆகியோரிடம் கடந்த வாரம் கொடுத்தனர்.

இந்நிலையில் நேற்று அன்பழகன், விஜயா ஆகியோர் பெட்டியை கொடுத்து உங்களுக்கு கொடுக்க வேண்டிய 6 கோடியை பிரித்து எடுத்துக் கொள்ளுங்கள் என்று பணம் கொடுத்த இரண்டு பெண்களிடமும் கூறி உள்ளனர். அனைத்து பெண்கள் முன்னிலையில் சாவி மூலம் பெட்டியை மகளிர் சுய உதவிக் குழுவினர் திறந்து பார்த்தனர்.

அப்பொழுது அவர்களுக்கு அதிர்ச்சி காத்து இருந்தது. அந்த பெட்டியில் பணத்துக்கு பதிலாக கட்டுக், கட்டாக காகித நோட்டுகள் இருந்தன. அப்பொழுது தான் அன்பழகன், விஜயா ஆகியோர் தங்களை மோசடி செய்தது மகளிர் குழுவினர் அறிந்தனர். இதற்கு இடையே மோசடி குறித்து சூலூர் காவல் நிலையத்தில் பெண்கள் தகவல் தெரிவித்தனர்.

அதன் பேரில் காவல் துறையினர் பட்டணம் பகுதிக்குச் சென்று அன்பழகனை சுற்றி வளைத்து பிடித்தனர். இந்த வழக்கில் தலைமறைவான விஜயாவை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.

RELATED ARTICLES

Recent News