பிகாரில் உள்ள சமஸ்திபூர் ரயில் நிலையத்தின் நடைமேடையில் இரு குரங்குகள் வாழைப் பழத்துக்காக சண்டையிட்டுக் கொண்டிருந்தன.
அப்போது அந்த குரங்குகள் கையில் கிடைத்த பொருளை வீசி எறிந்தன. இந்த சண்டையை தொடர்ந்து திடீரென ஒரு குரங்கு மற்றொரு குரங்கின் மீது வீசிய பொருள் ரயில்வே மின்கம்பியில் விழுந்து அறுந்தது.
இதன்காரணமாக ரயில் போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டது. ரயில்வே பணியாளர்கள் மூலம் உடனடியாக இந்த பிரச்னை சரி செய்யப்பட்டு ரயில் சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டது.