ஆர்ப்பாட்டத்தில் கையை பிடித்த போலீசுக்கு அறைவிட்ட பெண்!

தெலுங்கானாவில் நடைபெற்ற தேர்தலின் போது காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் ஆஷா ஊழியர்களுக்கு தலா 1,8000 ரூபாய் ஊதியம் வழங்கப்படும் என்று வாக்குறுதி அளித்திருந்தது.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சி அனைத்து தேர்தல் வாக்குறுதிகளையும் அமலுக்கு கொண்டு வரவேண்டும் என்று வலுயுறுத்தி ஆஷா ஊழியர்கள் ஹைதராபாத்தில் உள்ள கோட்டி சௌரஸ்தாவில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை அப்புறப்படுத்துவதற்காக போலீஸ் அதிகாரிகள், பெண் போலீஸ் அங்கு குவித்திருந்தனர்.

பின்னர் பெண் போலீசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆஷா ஊழியர்களை அப்புறப்படுத்தி லாரியில் ஏற்ற முயன்ற போது அங்கிருந்த அங்கிருந்த போலீஸ் அதிகாரி ஒருவர் போராட்டத்தில் ஈடுப்பட்ட பெண்களின் கையை பிடித்து இழுத்து லாரியில் ஏற்ற முயன்றார்.

இந்த நிலையில் பலவந்தமாக லாரியில் ஏற்றப்பட்ட ஆஷா ஊழியர் ஒருவர், தங்களை கையை பிடித்து இழத்து லாரியில் ஏற்ற முயன்ற ஆண் போலீஸ் அதிகாரியின் கன்னத்தில் பளார் என்று அறைந்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

RELATED ARTICLES

Recent News