மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ஈசானிய தெருவில் அரசு டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது.
இந்த கடையில் கடந்த சில நாட்களாக கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதாக மது பிரியர்கள் தொடர்ந்து புகார் கூறி வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று இரவு நூற்றுக்கும் மேற்பட்ட மதுபிரியர்கள் டாஸ்மாக் கடை நுழைவாயில் வளாக கதவை பூட்டி முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தின் போது ரூ.190 என விலையில் அச்சிடப்பட்ட 180 மில்லி அளவுக் கொண்ட மதுபான பாட்டில் ரூ.220 என ரசீது கொடுத்துவிட்டு ரூபாய் 240 வாங்குவதாக குற்றம் சாட்டி அந்த ரசீது, மதுபான பாட்டிலை கையில் ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
மேலும் டாஸ்மாக் ஊழியர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என முழுக்கங்கள் எழுப்பினர். இதுகுறித்து தகவல் அறிந்த சீர்காழி போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்ட மதுப்பிரியர்களை சமாதானம் செய்து கடை ஊழியர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். இந்தப் போராட்டத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.