திண்டுக்கல் மாவட்டம் பழனி பேருந்து நிலையத்தில் நுழைவாயில் முன் போலீஸ் பூத் செயல்பட்டு வருகிறது. அங்கு இரவு பணியில் இருந்த காவலர்கள் ரோந்து பணியில் சென்றிந்தனர்.
அப்பொது சுமார் 45 வயது பெண் ஒருவர் மதுபோதையில் போலீஸ் பூத்தில் இருந்த டேபிள், சேர் உள்ளிட்ட பொருட்களை அடித்து நொறுக்கினார். பின்னர் அங்கிருந்த கட்டையால் தேநீர் கடையில் இருந்த டேபிள்களை தட்டியும் தகறாரில் ஈடுபட்டார்.
பின்னர் அங்கு வந்த ஆட்டோ ஓட்டுநர்கள் கட்டையை பிடுங்க முயற்சித்தனர் ஆனால் அவர்களால் முடியாமல் போக போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
தகவல் அறிந்த அங்கு வந்த போலீசார் பெண்ணை சமாதான படுத்த முயற்சித்தும் முடியாமல் போக பெண்ணின் மீது தண்ணீரை ஊற்றினர். தற்போது அந்த பெண் குடிபோதையில் அட்டகாத்தில் ஈடுபட்ட காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றனர்.