திருவண்ணாமலை மாவட்டத்தில் பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட விவசாய பயிர்களை மத்திய குழுவினர் ஆய்வு செய்தனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு கனமழையால் திருவண்ணாமலை அண்ணாமலையார் மலையில் ஏற்பட்ட மண் சரிவில் சிக்கி, 7 பேர் பலியாகினர்.
இதையடுத்து, திருவண்ணாமலை மாவட்டத்தில், பெஞ்சல் புயல் மழை பாதிப்பு குறித்து மத்தியக்குழுவினர் ஆய்வு செய்தனர்.
இந்த இடத்தில் மத்திய குழுவினர் டாக்டர் பொன்னுசாமி, ஐதராபாத்தை சேர்ந்த வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை இயக்குனர் சரவணன், சென்னை வேளாண் துறை அதிகாரி பாலாஜி, உள்ளிட்டோர் அடங்கிய அதிகாரிகள் குழுவினர். அங்கு சென்று பார்வையிட்டு மண்ணின் தன்மை குறித்து ஆய்வு செய்தனர்.
மேலும், மழையால் விவசாய பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளதை, சின்னகாங்கியனுார், கோணலுார், வேளானந்தல், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களை பார்வையிட்டனர். மேலும், தென்பெண்ணை ஆற்றில் அடித்து செல்லப்பட்ட பாலம், ஆகியவற்றையும் ஆய்வு செய்தனர். ஆய்வின்போது கலெக்டர் பாஸ்கர பாண்டியன் உள்ளிட்டோர் பலர் உடன் இருந்தனர்.