தெலுங்கு மொழியில் மட்டுமின்றி, இந்திய சினிமா ரசிகர்கள் மொத்தமாக எதிர்பார்த்து காத்துக் கிடந்த திரைப்படம் புஷ்பா 2. அல்லு அர்ஜூன், ஃபகத் ஃபாசிலின் நடிப்பு, வேகமான திரைக்கதை, ஆங்காங்கே சிரிக்க வைக்கும் காமெடி என்று பல அம்சங்கள் இருந்ததால், இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்நிலையில், இந்த திரைப்படத்தின் வசூல் நிலவரம் குறித்து தெரியவந்துள்ளது. அதன்படி, உலகம் முழுவதும் 6 நாட்களில் 990 கோடி ரூபாயை, இப்படம் வசூலித்துள்ளது.
இன்னும் ஒரு நாளில், ஆயிரம் கோடி ரூபாய் வசூலை இப்படம் நிகழ்த்திவிடும் என்று சொல்லப்படுகிறது. இதன்மூலம், ஆயிரம் கோடி ரூபாயை குறைந்த நாட்களில் ஈட்டிய திரைப்படம் என்ற சாதனையை புஷ்பா படைக்க உள்ளது.