ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அங்காடி திப்பாவை சேர்ந்த மீனவர் நரேந்திரா (21) என்பவருக்கு கடந்த 40 நாட்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.
நரேந்திரா ஆன்லைன் கடன் செயலி மூலம் வாங்கிய கடனில் அனைத்து தவணைகளையும் செலுத்தி வந்த நிலையில் இறுதி தவணை 2000 ரூபாயை பாக்கி வைத்திருந்தார்.
பாக்கி பணம் 2000 ரூபாய் மேலும் அதற்குரிய வட்டி வட்டிக்கு வட்டி என்று கணக்கு போட்டு ஒரு பெரிய தொகையை செலுத்தக் கோரி கடன் நிறுவன நிர்வாகிகள் தொல்லை கொடுத்து வந்துள்ளனர்.
மேலும் நரேந்திரா மற்றும் அவரது புது மனைவி ஆகியோரின் புகைப்படத்தை மார்பிங் செய்து குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு அனுப்பி வைத்ததால் மனம் உடைந்த அவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பெற்றோர் போலீசில் புகார் அளித்ததை அடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.