தமிழ் சினிமாவின் காமெடி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் யோகிபாபு. மண்டேலா, பொம்மை நாயகி போன்ற சில படங்களில் ஹீரோவாகவும் நடித்து, தனது நடிப்பு திறமையை வெளிக்காட்டியிருக்கிறார்.
இந்நிலையில், சன்னிதானம் பி.ஓ என்ற திரைப்படத்தில், நடிகர் யோகிபாபு தற்போது நடித்து வருகிறார். அமுதா சாரதி என்பவர் இயக்கும் இந்த திரைப்படத்திற்கு, அஜினு ஐயப்பன் என்பவர் கதை, திரைக்கதை எழுதியுள்ளார்.
எதிர்பாரா சம்பவம் ஒன்றில், ஐயப்ப பக்தர்கள் சிக்குவதை மையமாக வைத்து உருவாக்கப்பட்டு வரும் இந்த திரைப்படம், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு ஆகிய 5 மொழிகளில், வெளியாக உள்ளது.