தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைககளில் ஒருவராக இருப்பவர் நயன்தாரா. இவர், சமீபத்தில் ஊடகம் ஒன்றிற்கு பேட்டி ஒன்றை அளித்திருந்தார்.
அந்த பேட்டியில், லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை, பெயருக்கு பின்னால் போடுவது, தனக்கு பிடிக்காது என்றும், தயாரிப்பாளரின் கட்டாயத்தால் தான், அந்த அடைமொழியை வைத்திருப்பதாகவும் அவர் கூறியிருந்தார்.
ஆனால், வேறொரு அதிர்ச்சி தகவல், இணையத்தில் தற்போது வைரலாக பரவி வருகிறது. அதாவது, தனது பெயருக்கு பின்னால், லேடி சூப்பர் ஸ்டார் என்ற அடைமொழி வேண்டும் என்று, நயன்தாரா தான் அழுத்தம் கொடுப்பதாக, செய்திகள் பரவி வருகிறது. இதுதொடர்பாக, பத்திரிகையாளர்கள் சிலரும், பரபரப்பாக பேசி வருகின்றனர்.