அட்டகத்தி, மெட்ராஸ், கபாலி, காலா, சார்பட்டா பரம்பரை, நட்சத்திரம் நகர்கிறது, தங்கலான் ஆகிய படங்களை இயக்கியவர் பா.ரஞ்சித். இவரது ஒவ்வொரு திரைப்படமும், தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லும் வகையில் அமைக்கப்பட்டிருக்கும்.
இவ்வாறு இருக்க, இவர் தனது அடுத்த படத்தின் பணிகளை, தற்போது தொடங்க உள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, அட்டகத்தி தினேஷ், ஆர்யா ஆகியோரை வைத்து, கேங்ஸ்டர் கதையை உருவாக்கியுள்ளார்.
மேலும், இந்த படத்தில், மேஜிக்கல் ரியலிசம் இடம்பெற இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த பாணியில், இந்தியாவிலேயே உருவாகும் முதல் படமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. மேலும், இப்படத்தின் படப்பிடிப்பு, வரும் ஜனவரி மாதம் முதல் தொடங்க உள்ளது.