கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவான 44-வது படத்தில் நடித்து முடித்த நடிகர் சூர்யா, தற்போது ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் உருவாகும் 45-வது படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்திற்கான முதற்கட்ட படப்பிடிப்பு, விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில், இப்படத்தில் நடிகர் சூர்யாவின் கதாபாத்திரம் என்ன என்ற தகவல், தற்போது கசிந்துள்ளது.
அதன்படி, இப்படத்தில் வழக்கறிஞர் வேடத்தில், சூர்யா நடித்து வருகிறாராம். இதற்கு முன்னர், ஜெய் பீம், எதற்கும் துணிந்தவன் ஆகிய படங்களில், வழக்கறிஞர் வேடத்தில் அவர் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.