வெற்றிமாறன் இயக்கத்தில், சூரி, விஜய்சேதுபதி ஆகியோர் நடிப்பில் உருவான திரைப்படம் விடுதலை. முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து, தற்போது இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது.
இந்த திரைப்படம், வரும் வெள்ளிக் கிழமை அன்று, திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது. இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பு, இப்படம் சென்சார் செய்யப்பட்டுள்ளது.
அப்போது, அதிகாரத்திற்கு எதிராக இடம்பெற்றிருந்த பவர்ஃபுல்லான வசனம் ஒன்றை, சென்சார் அதிகாரிகள் நீக்க வலியுறுத்தியுள்ளனர். ஆனால், வெற்றிமாறன் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளாராம். இதனால், அந்த படத்திற்கு, அதிகாரிகள் ‘A’ சான்றிதழை வழங்கியுள்ளார்களாம்.