தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் தனுஷ். இவர், தமிழ் மட்டுமின்றி, இந்தி, தெலுங்கு, ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளிலும், சில திரைப்படங்களில் நடித்து, ரசிகர்களை வைத்திருக்கிறார்.
இந்திய சினிமாவின் திறமையான நடிகர்களில் ஒருவராக பார்க்கப்படும் இவர், சமீபத்தில் இளையராஜாவின் பயோபிக்கில் நடிக்க இருப்பதாக கூறப்பட்டது. ஆனால், சரியான தயாரிப்பாளர் கிடைக்காத காரணத்தால், அந்த படத்தை தொடங்க முடியாத சூழல் இருந்து வருகிறது.
இந்நிலையில், வேறொரு நடிகரின் வாழ்க்கை வரலாற்று கதையில், நடிகர் தனுஷ் நடிக்க இருப்பதாக, தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, காமெடி நடிகர் சந்திரபாபுவின் வாழ்க்கை வரலாற்றுக் கதையில் தான், தனுஷ் நடிக்க உள்ளாராம்.