மாநாடு, வெந்து தணிந்தது காடு, பத்து தல ஆகிய தொடர் வெற்றிப் படங்களை சிம்பு கொடுத்திருந்தார். இந்த படங்களுக்கு பிறகு, இவரது நடிப்பில் தக் லைஃப் என்ற திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ளது.
இதையடுத்து, அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் உருவாகும், ரொமாண்டிக் காமெடி திரைப்படத்தில், சிம்பு நடிக்க உள்ளார். இந்நிலையில், கைவசம் உள்ள படங்களை முடித்த பிறகு, பார்க்கிங் பட இயக்குநருடன் சிம்பு இணைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது, பார்க்கிங் பட இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன், சிம்புவுக்கு கதை ஒன்றை கூறியுள்ளாராம். இது, சிம்புவுக்கு மிகவும் பிடித்துவிட்டதால், திரைக்கதையாக தயார் செய்யும்படி கூறியுள்ளாராம். இந்த திரைக்கதையும் சிம்புவை கவர்ந்தால், இவர்கள் இருவரும் இணைய வாய்ப்பு உள்ளது.