ஜாக்கி ஜானின் புதிய பட டிரைலர்.. அதிருப்தி அடைந்த தமிழ் ரசிகர்கள்..

ஜாக்கி ஜான், ஜேடன் ஸ்மித் நடிப்பில், ஹரால்ட் ஸ்வார்ட் இயக்கத்தில் உருவான திரைப்படம் கராத்தே கிட். 2010-ஆம் ஆண்டு ரிலீஸ் ஆன இந்த திரைப்படம், மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருந்தது. 14 வருடங்களுக்கு பிறகு, இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகம், தற்போது உருவாகி உள்ளது.

இதிலும், நடிகர் ஜாக்கி ஜான் தான் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். வரும் 2025-ஆம் ஆண்டு மே 30-ஆம் தேதி அன்று, இந்த திரைப்படம் உலகம் முழுவதும் ரிலீஸ் ஆக உள்ளது. இந்நிலையில், இதன் டிரைலரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். ஆங்கிலம் மட்டுமின்றி, தமிழ் உள்ளிட்ட இந்திய பிராந்திய மொழிகளிலும், இந்த டீசர் டப்பிங் செய்யப்பட்டு, ரிலீஸ் ஆகியுள்ளது.

இதில், தமிழ் டப்பிங்கை பார்த்த ரசிகர்கள், கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். அதாவது, வழக்கமாக ஜாக்கி ஜானின் படங்களுக்கு முரளி குமார் என்ற டப்பிங் கலைஞர் தான் குரல் கொடுப்பார்.

ஆனால், இந்த திரைப்படத்தில், அவருக்கு பதிலாக, வேறொரு நபர் குரல் கொடுத்துள்ளார். இதனை அறிந்த ரசிகர்கள், முரளி குமாரின் குரலை மிஸ் பண்ணுவதாகவும், அந்த குரலில் டப்பிங் செய்தால் சிறப்பாக இருக்கும் என்றும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

RELATED ARTICLES

Recent News