வணக்கம் சென்னை படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் கிருத்திகா உதயநிதி. இந்த படத்திற்கு பிறகு, காளி, பேப்பர் ராக்கெட் ஆகிய படைப்புகளை இயக்கிய இவர், தற்போது காதலிக்க நேரமில்லை என்ற படத்தை இயக்கி வருகிறார்.
ஜெயம் ரவி, நித்யா மெனன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகும் இந்த படத்திற்கு, ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். ஏற்கனவே இப்படத்தின் முதல் சிங்கிள் பாடல் ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது இரண்டாவது பாடலின் அப்டேட் கிடைத்துள்ளது.
அதன்படி, இப்படத்தின் 2-வது சிங்கிளான, லாவண்டர் நிறமே, இன்று மாலை 5 மணிக்கு ரிலீஸ் ஆக உள்ளது. முதல் பாடலை போல, இந்த பாடலும் ரசிகர்களை கவருமா என்று, ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.