இந்தியாவில் கிங் பிஷ்ஷர் என்ற நிறுவனத்தை நடத்தி வந்தவர் விஜய் மல்லய்யா. இவர், 9 கோடி கடனை வாங்கிவிட்டு, திருப்பி செலுத்தாமல், UK-வுக்கு தப்பி சென்றுவிட்டார். இதையடுத்து, இவரை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்த இந்திய அரசு, அவரது சொத்துக்களை முடக்கியது.
இந்நிலையில், நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில், மாணியக்குழு கோரிக்கையின் மீதான விவாதம் நேற்று முன்தினம் நடைபெற்றது. அப்போது பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், “விஜய் மல்லையாவுக்கு சொந்தமான 14 ஆயிரத்து 131.6 கோடி ரூபாயை, மத்திய அரசு மீட்டுவிட்டது” என்றும், “முக்கியமான வழக்குகளில் மட்டும், 22 ஆயிரத்து 280 கோடி ரூபாய் சொத்துக்களை, அமலாக்கத்துறை வெற்றிகரமாக மீட்டுள்ளது” என்றும் தெரிவித்தார்.
இவரது இந்த பேச்சை கேட்ட விஜய் மல்லய்யா, தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “ஆயிரத்து 200 கோடி ரூபாய் வட்டியை சேர்த்து, 6 ஆயிரத்து 203 கோடி ரூபாய் தனக்கு கடன் இருப்பதாக, கடனை மீட்கும் தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது.
ஆனால், அமலாக்கத்துறை மூலமாக, 14 ஆயிரத்து 131.6 கோடி ரூபாயை, வங்கிகள் திரும்ப பெற்றிருப்பதாக, நீதியமைச்சர் நாடாளுமன்றத்தில் கூறியுள்ளார். மொத்த கடனை விட இரண்டு சொத்தை எப்படி பறிமுதல் செய்தார்கள் என்பதை, அமலாக்கத்துறையும், வங்கிகளும், சட்டரீதியாக நிரூபிக்க வேண்டும். இல்லையென்றால், எனக்கான நிவாரண நிதியை பெறும் முயற்சியில் ஈடுபடுவேன்” என்று அவர் கூறியுள்ளார்.