விஜய் நடிப்பில் கடைசியாக தி கோட் என்ற திரைப்படம், ரிலீஸ் ஆகியிருந்தது. இந்த திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு, எச்.வினோத் இயக்கத்தில் உருவாகும் படத்தில் அவர் நடித்து வருகிறார்.
இந்நிலையில், இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடர்பான தகவல் கசிந்துள்ளது. அதன்படி, வரும் 1-ஆம் தேதி முதல், இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தொடங்க உள்ளதாம்.
1-ஆம் தேதியில் இருந்து தொடர்ச்சியாக 45 நாட்கள் படப்பிடிப்பு நடக்கும் என்றும், அதன்பிறகு ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிவடைகிறது என்றும் கூறப்படுகிறது.