த்ரிஷா இல்லனா நயந்தாரா என்ற திரைப்படத்தின் மூலம், இயக்குநராக அறிமுகமானவர் ஆதிக் ரவிச்சந்திரன். இந்த படத்திற்கு பிறகு, AAA, பஹிரா போன்ற திரைப்படங்களை இயக்கி, தனது மார்கெட்டை இழந்திருந்தார். பின்னர், நீண்ட இடைவெளி எடுத்துக் கொண்ட ஆதிக், மார்க் ஆண்டனி என்ற ப்ளாக் பஸ்டர் ஹிட் படத்தை கொடுத்தார்.
மேலும், விஷால், எஸ்.ஜே.சூர்யா ஆகியோருக்கும், அந்த திரைப்படம் மிகப்பெரிய திருப்புமுனையை கொடுத்தது. இந்நிலையில், மார்க் ஆண்டனி படத்தின் 2-ஆம் பாகம் குறித்து தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது, ஆதிக் ரவிச்சந்திரன் தற்போது குட் பேட் அக்லி என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார்.
இந்த படத்தை முடித்த பிறகு, அவர் எந்த படத்தை இயக்குவார் என்று ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர். இந்த சமயத்தில், நடிகர் விஷால் ஆதிக்கை அணுகி, மார்க் ஆண்டனி 2-ஆம் பாகத்தை உருவாக்கலாமா என்று கேட்டுள்ளாராம். இதற்கு ஆதிக் ரவிச்சந்திரன் ஒத்துக் கொண்டால், மார்க் ஆண்டனி 2 திரைப்படம் தயார் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.