வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய்சேதுபதி, சூரி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்த திரைப்படம் விடுதலை 2. சமீபத்தில் ரிலீஸ் ஆன இந்த திரைப்படத்தை பார்த்த ரசிகர்கள், படத்தில் அதிக பிரச்சார நெடி இருப்பதாகவும், படம் நீண்ட நேரத்தை கொண்டிருப்பதாகவும், விமர்சித்து வருகின்றனர்.
ஒருசிலர், படத்தில் இடம்பெற்ற அரசியல் கருத்துக்கள் அனைவருக்கும் கண்டிப்பாக சேரவேண்டிய ஒன்று என்றும் கூறி வருகின்றனர்.
இவ்வாறு கலவையான விமர்சனங்களை இப்படம் பெற்று வரும் நிலையில், பாக்ஸ் ஆபிஸ் வசூல் குறித்த தகவல் கிடைத்துள்ளது. அதன்படி, 3 நாட்களில், இப்படம் 30 கோடி ரூபாயை வசூலித்திருப்பதாக, தகவல் வெளியாகியுள்ளது.