தமிழ் மக்களின் பாரம்பரிய பண்டிகைகளில் ஒன்றாக பார்க்கப்படுபவது பொங்கல் திருவிழா. இந்த விழாவையொட்டி, அரசு சார்பில் பரிசுத் தொகுப்பு வழங்கப்படுவது வழக்கம்.
இந்த பரிசுத் தொகுப்பில், பொங்கல் செய்வதற்கு தேவையான உணவு பொருட்களும், கரும்பும், ஆயிரம் ரூபாய் பணமும் இடம்பெற்றிருக்கும். இந்நிலையில், இந்த பரிசுத் தொகுப்பு, இந்த முறை எந்த தேதியில் விநியோகிக்கப்படும் என்ற தகவல் கிடைத்துள்ளது.
அதாவது, கூடுதல் தலைமை செயலாளர் ராதாகிருஷ்ணன், செய்தியாளர்களை இன்று சந்தித்தார். அப்போது பேசிய அவர், பரிசுத் தொகுப்புகளுக்கான பொருட்களை கொள்முதல் செய்யும் பணி நடந்து வருகிறது என்றும், பொங்கல் பண்டிகைக்கு 5 நாட்களுக்கு முன்பாக, பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.