செல்போன்கள் பேசிக் கொண்டும், மது அருந்தியபடியும், வாகனங்களை இயக்கக் கூடாது என்று மோட்டார் வாகன விதி, பல வருடங்களாக அமலில் இருந்து வருகிறது.
ஆனால், சில அரசு பேருந்து ஓட்டுநர்கள், இந்த விதியை பின்பற்றாமல், வாகனங்களை இயக்கி வருகின்றனர். இதுதொடர்பான வீடியோக்களும் இணையத்தில் வெளியாகி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில், தமிழக அரசின் போக்குவரத்துத்துறை சார்பில், சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
அதில், ஓட்டுநர்கள் பேருந்துகளை இயக்கும்போது செல்போன் பயன்படுத்தினால், 29 நாட்கள் பணியிடை நீக்கம் செய்யப்படுவர் என்று கூறப்பட்டுள்ளது. மேலும், அதிகாரிகள் மூலமாக, ஓட்டுநர்களுக்கும் இதுதொடர்பாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.