கண்ணியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர் 19-வயது பெண். இவர், சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில், மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்து வந்துள்ளார். மேலும், கல்லூரி விடுதியிலும் தங்கி வந்துள்ளார்.
இவரும், அதே பல்கலைக்கழகத்தை சேர்ந்த 3-ஆம் ஆண்டு பயிலும் மாணவரும், காதலித்து வந்த நிலையில், நேற்று முன்தினம் இருவரும் தனிமையில் சந்தித்துள்ளனர். அப்போது, அங்கு வந்த மர்ம நபர்கள் 2 பேர், காதலனை தாக்கிவிட்டு, இளம்பெண்ணிடம் அத்துமீறியுள்ளனர்.
மேலும், அதனை வீடியோவாகவும் பதிவு செய்துள்ளனர். இதையடுத்து, அங்கிருந்த தப்பி வந்த பெண், தனது காதலருடன் சேர்ந்து, காவல்துறையில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் ஒருவரை பிடித்து, காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதிக அளவில் பாதுகாப்பு உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்திலேயே, பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருப்பது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இந்த சம்பவத்தை கண்டித்தும், இந்திய மாணவர் சங்கம் சார்பில், போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.