சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில், இளம்பெண் ஒருவர் மெக்கானிக்கல் பிரிவில் பொறியியல் படித்து வந்தார். இந்த மாணவியை, அப்பகுதியில் பிரியாணி விற்பனை செய்து வந்த ஞானசேகரன் என்ற நபர், பாலியல் வன்கொடுமை செய்திருந்தார்.
இந்த சம்பவம், மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே, இந்த விவகாரம் குறித்து, தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை நடத்தி வருகிறது.
இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்துவதற்கு, உண்மை கண்டறியும் குழு அமைக்கப்பட்டிருப்பதாக, தேசிய மகளிர் ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும், இந்த குழு, வரும் டிசம்பர் 30-ம் தேதி அன்று, சென்னை வர இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.