சென்னை எழும்பூர் பகுதியில் உள்ள அரசு அருங்காட்சியகத்தில், தமிழ்நாடு அரசின் தொல்லியல்துறை சார்பில், சிந்துவெளிப் பண்பாட்டுக் கண்டுபிடிப்பு நூற்றாண்டு நிறைவு பன்னாட்டுக் கருத்தரங்கு, இன்று நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துக் கொண்டு, சிறப்புரையாற்றினார். அப்போது பேசிய அவர், சிந்துவெளி அடையாளங்களை, 1948-ஆம் ஆண்டிலேயே வெளியே கொண்டு வந்தவர் அண்ணா என்றும், சிந்துவெளி நாகரீகத்தை அடையாளப்படுத்தியவர் கலைஞர் கருணாநிதி என்றும் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், சிந்துவெளி எழுத்து புதிரை கண்டுபிடிப்பவர்களுக்கு, 1 மில்லியன் அமெரிக்க டாலர்கள் பரிசு வழங்கப்படும் என்றும், கூறினார்.