பா.பாண்டி, ராயன், நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் ஆகிய படங்களை தொடர்ந்து, தனது 4-வது படத்தை, நடிகர் தனுஷ் இயக்கி வருகிறார். இந்த திரைப்படத்தில், நித்யா மேனன், அருண் விஜய் உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர்.
இப்படம், வரும் ஏப்ரல் 10-ஆம் தேதி அன்று, திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது. இந்நிலையில், இப்படத்தின் ஓவர்சீஸ் உரிமம் விற்பனை செய்யப்பட்டது குறித்து, புதிய தகவல் கிடைத்துள்ளது. அதன்படி, 12 கோடி ரூபாய்க்கும் மேல், இப்படத்தின் உரிமம் விற்பனை செய்யப்பட்டுள்ளதாம்.
இதற்கு முன்னர் வெளியான தனுஷின் ராயன் திரைப்படம், வெறும் 8 கோடி ரூபாய்க்கு தான் விற்பனை செய்யப்பட்டதாம். அதனை காட்டிலும், அதிக தொகைக்கு இப்படம் விற்பனை ஆகியிருப்பது, பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.