ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் – திமுக வேட்பாளர் அறிவிப்பு!

ஈரோடு கிழக்கு தொகுதியின் எம்.எல்.ஏ-வாக காங்கிரஸ் கட்சியின் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பதவி வகித்து வந்த நிலையில், சமீபத்தில் மரணம் அடைந்தார். இதையடுத்து, அந்த தொகுதி காலியாக அறிவிக்கப்பட்டு, வரும் 5-ஆம் தேதி அன்று, தேர்தல் நடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த தேர்தலில், திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் யார் என்பதை, கழக தலைமை அறிவித்துள்ளது. அதன்படி, வி.சி.சந்திரசேகர் என்பவர் தான், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட உள்ளார்.

வி.சி.சந்திரகுமார் தற்போது திமுக கொள்கை பரப்பு இணைச் செயலாளர் பதவியில் உள்ளார். இதற்கு முன்னர், ஈரோடு கிழக்கு தொகுதி, காங்கிரஸ் வசம் இருந்தது. ஆனால், தற்போது அந்த தொகுதியில், காங்கிரஸ்-க்கு பதிலாக திமுக போட்டியிடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

Recent News