பெண்களுக்கு எதிரான குற்றங்கள்.. நிறைவேற்றப்பட்ட சட்ட திருத்த மசோதா..

சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி, ஞானசேகரன் என்பவரால், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இந்த சம்பவம், மிகப்பெரிய பரபரப்பை தமிழகம் முழுவதும் ஏற்படுத்தியிருந்தது. இதுகுறித்து, தமிழக சட்டப்பேரவையிலும் விவாதிக்கப்பட்டது.

இவ்வாறு இருக்க, பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்களுக்கான தண்டனைகளை கடுமையாக மாற்றி, தமிழக சட்டமன்றத்தில், நேற்று சட்டதிருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், இன்று கூடிய சட்டப்பேரவை கூட்டத்தில், இந்த சட்டத் திருத்த மசோதா அவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த புதிய சட்டத் திருத்தத்தின்படி, பெண்களை பின்தொடர்ந்து தொந்தரவு செய்தல் குற்றத்திற்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், கூட்டு பாலியல் வன்கொடுமை குற்றத்திற்கு தூக்கு தண்டனையும் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.

RELATED ARTICLES

Recent News