தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், இன்று தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்த பதிவில், நீட் தேர்வை ரத்து செய்வதாக உறுதியளித்துவிட்டு, ஆட்சிக்கு வந்த திமுக, மக்களை ஏமாற்றிவிட்டது என்று கூறியிருந்தார். இந்த பதிவு, இணையத்தில் வைரலாக பரவி வந்தது.
இந்நிலையில், ஓ.பன்னீர் செல்வம், தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தமிழ்நாட்டை விடியலை நோக்கி அழைத்துச் செல்கிறோம் என்றுகூறி ஆட்சிக்கு வந்த தி.மு.க., தமிழ்நாட்டை அழிவுப் பாதைக்கு அழைத்துச் சென்று கொண்டிருக்கிறது. கடந்த 42 மாத காலம் தமிழ்நாட்டின் இருண்ட காலம் என்று சொல்லும் அளவுக்கு ஒரு மோசமான ஆட்சியாக தி.மு.க. அரசு விளங்கிக் கொண்டிருக்கிறது.
தமிழ்நாட்டின் இருண்ட கால ஆட்சியை பொற்கால ஆட்சியாக மாற்ற புரட்சித் தலைவி அம்மா அவர்களின் தொண்டர்கள் அனைவரும் ஓரணியில் நின்று அடுத்தத் தேர்தலில் ஜனநாயகத்தின்மூலம் தமிழ்நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டுமென்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். மேலும், இரண்டு பக்க அளவில், அறிக்கை ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார்.
தமிழ்நாட்டை விடியலை நோக்கி அழைத்துச் சொல்கிறோம் என்றுகூறி ஆட்சிக்கு வந்த தி.மு.க., தமிழ்நாட்டை அழிவுப் பாதைக்கு அழைத்துச் சென்று கொண்டிருக்கிறது. கடந்த 42 மாத காலம் தமிழ்நாட்டின் இருண்ட காலம் என்று சொல்லும் அளவுக்கு ஒரு மோசமான ஆட்சியாக தி.மு.க. அரசு விளங்கிக் கொண்டிருக்கிறது.… pic.twitter.com/yiNMVroVG2
— O Panneerselvam (@OfficeOfOPS) January 11, 2025