துபாய் கார் ரேஸ்.. பின்வாங்கினார் நடிகர் அஜித்..

துபாயில் 24H என்ற பெயரில், கார் பந்தய தொடர் நடக்க உள்ளது. இந்த தொடரில், நடிகர் அஜித் தனது அஜித்குமார் ரேஸிங் என்ற நிறுவனத்தின் சார்பில் போட்டியிட இருந்தார். இதற்கிடையே, இந்த தொடருக்காக பயிற்சி எடுத்துக் கொண்டிருந்தபோது, விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில், அவருக்கு காயம் ஏற்பட்டதாகவும் சொல்லப்பட்டது. இந்நிலையில், அஜித்குமார் சார்பில் அறிக்கை ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. அந்த அறிக்கையில், துபாய் கார் பந்தயப் போட்டியில் கார் ஓட்டும் முடிவில் இருந்து அஜித் பின்வாங்கியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

அன்மையில் ஏற்பட்ட விபத்தையொட்டி ரேஸில் இருந்து பங்கேற்க போவதில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும், அணியின் உரிமையாளர் என்ற முறையில் அணியின் நலனுக்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும், அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஆனால், துபாய் போட்டியில் அஜித் குமாரின் அணி தொடர்ந்து போட்டியிடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முடிவை நடிகர் அஜித்தே தான் எடுத்துள்ளார்.

RELATED ARTICLES

Recent News