ஷங்கர் இயக்கத்தில், விக்ரம், சதா, பிரகாஷ்ராஜ், விவேக் உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்த திரைப்படம் அந்நியன். கடந்த 2005-ஆம் ஆண்டு ரிலீஸ் ஆன இந்த திரைப்படம், மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
இந்த திரைப்படத்தை, இந்தியில் ரீமேக் செய்வதற்கு, ஷங்கர் சமீபத்தில் முடிவு செய்திருந்தார். விக்ரம் நடித்த கதாபாத்திரத்தில் ரன்வீர் சிங் நடிப்பதாகவும் கூறப்பட்டது.
ஆனால், சில பிரச்சனைகளின் காரணமாக, அப்படம் திடீரென கிடப்பில் போடப்பட்டது. இந்நிலையில், இந்த திரைப்படம் குறித்து ஷங்கர் தற்போது அப்டேட் ஒன்றை கொடுத்துள்ளார்.
அதாவது, “பெரிய அளவில் ஏதாவது செய்யப் பார்க்கிறோம். பல பான்-இந்தியப் படங்கள் வந்துள்ளன. ரன்வீர் சிங்குடன் இணைந்து ஒரு படத்தில் பணியாற்ற திட்டமிட்டுள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.