லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் கூலி. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தில், ரஜினியுடன் சேர்ந்து, சத்யராஜ், நாகர்ஜூனா, ஸ்ருதி ஹாசன், சௌபின் சாகிர் என்று மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.
இப்படத்தின் படப்பிடிப்பு, விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படத்தின் ரிலீஸ் குறித்து, புதிய தகவல் ஒன்று கசிந்துள்ளது. அதன்படி, வரும் ஆகஸ்டு மாதம் அன்று, இப்படத்தை ரிலீஸ் செய்ய, படக்குழுவினர் முடிவு செய்துள்ளார்களாம்.
ஜெயிலர் படம் ஆகஸ்டு மாதம் ரிலீஸ் ஆகி, மிகப்பெரிய வெற்றிப் பெற்றதால், அதே மாதத்தில் கூலியை ரிலீஸ் செய்யலாம் என்று, செண்டிமென்டாக முடிவு செய்துள்ளார்களாம்.