கிச்சா சுதீப் நடிப்பில், விஜய் கார்த்திகேயன் இயக்கத்தில், கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் உருவான திரைப்படம் மேக்ஸ். கன்னட மொழியில் உருவாகி, தமிழிலும் டப்பிங் செய்யப்பட்ட இந்த திரைப்படம், மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
இந்நிலையில், இந்த திரைப்படத்தில், முதலில் நடிக்க இருந்தவர் வேறொரு தமிழ் நடிகர் என்று தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, இந்த திரைப்படத்தின் கதையை, விதார்த்தை மனதில் வைத்து தான், இயக்குநர் எழுதியிருந்தாராம்.
ஆனால், கிச்சா சுதீப்பின் கால்ஷீட் இருப்பதால், அவருக்காக திரைப்படத்தை எடுக்கும்படி தயாரிப்பாளர் தாணு தான் கூறிவிட்டாராம்.