ஈரோடு கிழக்கு தொகுதியில், வரும் 5-ஆம் தேதி அன்று இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தொகுதியில், தற்போது காங்கிரஸ்-க்கு பதிலாக, திமுக போட்டியிட உள்ளது. மேலும், வி.சி.சந்திரசேகர் தான் போட்டியிட உள்ளார் என்றும், திமுக தலைமை அறிவித்துவிட்டது.
ஆனால், இந்த இடைத்தேர்தல், ஜனநாயக முறைப்படி நடக்காது என்று கூறி, அதிமுக, தேமுதிக ஆகிய கட்சிகள் தேர்தலை புறக்கணித்துள்ளன. இந்நிலையில், இந்த தேர்தலை பாஜகவும் புறக்கணித்துள்ளது என்று, மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அவர், 2026-ஆம் ஆண்டு நடக்கும் தேர்தல் தங்களது இலக்கு என்றும், அந்த தேர்தலில் திமுகவை தோற்கடித்து, நல்லாட்சியை வழங்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், இதற்கு முன்னர் நடைபெற்ற இடைத்தேர்தலில், தேர்தல் விதிமுறைகளை திமுக மீறி செயல்பட்டது என்று விமர்சித்த அவர், இந்த இடைத்தேர்தலை புறக்கணிப்பதாகவும், அறிக்கையில் தெரிவித்துள்ளார்.