விஜயின் மகனான ஜேசன் சஞ்சய், நடிகர் சந்தீப் கிஷனை வைத்து, புதிய படம் ஒன்றை இயக்க உள்ளார். இந்த படத்திற்கான அறிவிப்பு வெளியாகி, பல மாதங்கள் ஆன நிலையில், இன்னும் படப்பிடிப்பு துவங்கப்படாமலே இருந்து வருகிறது.
இதனால், வேறு ஏதாவது தயாரிப்பு நிறுவனத்துடன் இணையலாமா என்று, ஜேசன் சஞ்சய், அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திராவுடன் செல்போனில் ஆலோசனை கேட்டுள்ளாராம்.
அப்போது அருகில் இருந்த அஜித், சுரேஷ் சந்திராவிடம் இருந்து செல்போனை வாங்கி, ஜேசன் சஞ்சயிடம் பேசியுள்ளார். மேலும், “உனக்கு ஏதாவது உதவி தேவைப்பட்டால், தயங்காமல் என்னிடம் கேள். எனக்கு தெரிந்த தயாரிப்பு நிறுவனங்களிடம் உன்னை பரிந்துரைக்கிறேன்” என்று கூறினாராம்.
இந்த சம்பவம் சில மாதங்களுக்கு முன்பு நடந்த நிலையில், தற்போது இந்த தகவல் இணையத்தில் பரவி வருகிறது.