தமிழ் சினிமாவின் தரமான இயக்குநர்களில் ஒருவராக இருப்பவர் பாலா. ஆனால், சில வருடங்களாக திரைப்படங்கள் எதையும் இயக்காமல் இருந்து வந்த இவர், அருண் விஜயை வைத்து, வணங்கான் என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார்.
கடந்த 10-ஆம் தேதி அன்று, இப்படம் ரிலீஸ் ஆன நிலையில், கலவையான விமர்சனங்களையே பெருமளவில் பெற்று வருகிறது. இவ்வாறு இருக்க, வணங்கான படத்தின் வசூல் நிலவரம் குறித்து, புதிய தகவல் கிடைத்துள்ளது.
அதன்படி, 3 நாட்களில் மட்டும், உலகம் முழுவதும், 4.5 கோடி ரூபாயை, இப்படம் வசூலித்துள்ளதாம். 50 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டிருப்பதாக கூறப்படும் இப்படம், தற்போது வரை தனது ஒரு சதவீத முதலீட்டை மட்டுமே திரும்ப பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.